• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏன் இந்த “ செல்பி” மோகம்?

April 27, 2016 தண்டோரா.காம்

ஏனிந்த வெறி!

‘’செல்பி’’யினால் ஏற்பட்ட 27 மரணங்களில் பாதி சம்பவங்கள் இந்தியாவில் நடந்ததே என்று கணிப்பு கூறுகிறது.

இதோ மற்றுமொரு கொடைக்கானல் சம்பவம்

மதுரையில் வசிக்கும் கார்த்திக் என்னும் 25 வயது இளைஞர் தன்னுடைய நண்பர்களுடன் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளார்.

வெய்யில் காலத்தில் ,வெப்பத்தில் இருந்து சிறிதாவது விடுபட ஊட்டி, குன்னூர், கொடைக்கானல், போன்ற பல விதமான மலை பிரதேசத்திக்குச் செல்வது பலரது வழக்கம்.

அவ்வாறு சென்ற கார்த்திக்கும்,நண்பர்களும்,கொடைக்கானலின் இயற்கை அழகையும் .சுற்றுலா தலங்களையும் ,ரசித்த பின்பு ‘’மலைகளின் அழகு’’ என்று வர்ணிக்கப்படும் மிக உயரமான

மலை உச்சிக்குச் சென்றுள்ளனர். அந்த இடம் சுற்றுலா பயணிகளுக்குத் தடை செய்யப் பட்ட இடமாகும்.

அங்கு சிறிது நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துள்ளனர். திரும்பு முன் கார்த்திக் ஒரு “செல்பி’ எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். பின்னே இருக்கும் 1000 அடி

பள்ளத்தைக் கவனிக்காமல் நகர்ந்ததால் தவறிக் கீழே விழுந்து விட்டார்.

வனத் துறையினரும் தீயணைப்புப் படையினரும் அவர்களால் இயன்ற முயற்சி செய்துள்ளனர்.எனினும் இதுவரையில் எந்த பலனும் கிட்டவில்லை என்று கூறியுள்ளனர்.

காவல் துறையினர் கூறுகையில், கார்த்திக்கும், மற்றவர்களும், சுற்றுலாத் தலங்களை ரசித்த பின்பு மது உட்கொண்டுள்ளனர்.அதனால் இந்த விபத்துக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது போன்று பல சம்பவங்கள்.

ஹைதராபாத்தில் வசிக்கும் மன்சூர் சௌத்ரி ,எனும் 10ம் வகுப்பு மாணவன் தனது தேர்வு முடிந்தவுடன் ,ஒரு மாற்றத்திற்காகத் தனது சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோருடன்

ஹைதராபாத்திலுள்ள மிகப் பெரிய மிருகக் காட்சி சாலைக்குச் சென்றுள்ளார். பட்டாம்பூச்சிக் கூட்டங்களை எல்லாம் ரசித்த பின்பு ,அவரை விட 3 மடங்கு உயரமுள்ள ஒரு மலை மேல்

ஏறியுள்ளார். எதற்குத் தெரியுமா? ‘’செல்பி’’ எடுப்பதற்காக.

அங்கேயிருந்து தவறி விழுந்து தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டு தலை பாறையில் மோதி உயிர் இழந்துள்ளார்.மின்சாரம் தாக்கி இறந்தார் என்ற அனுமானத்தை மிருகக் காட்சி அதிகாரிகள்

மறுத்துள்ளனர்.

மற்றுமொரு சம்பவத்தில்,19 வயது இயந்திர வல்லுனர் ஒருவர் அழிந்து போகக்கூடிய தருவாயில் இருக்கும் மிருகங்களுடன் தான் இருக்குமாறு ஒரு ‘’செல்பி’’ எடுத்துத்,தன் சாகஸங்களை

மற்றவர்களுக்குக் காட்டும் வகையில் அதை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். அதை அறிந்த அதிகாரிகள் அவரை கைது செய்து காவலில் வைத்தனர்.

இதோ வேறு ஒன்று. ‘’செல்பி’’ எடுக்க முயன்று தண்ணீரில் அடித்துச் சென்ற சிறுமியைக் காப்பாற்ற முயன்றவரையும் தண்ணீர் அடித்துச் சென்று கொன்றது அதை விடக் கொடுமை.

இது போன்ற ‘’செல்பி’’துயர சம்பவங்களைக் கருத்தில் கொண்ட மும்பைக் காவல் துறை 16 இடத்தில் ‘’செல்பி’’ எடுக்கத் தடை விதித்தது.

சென்னையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.ஓடும் ரயிலுடன் ‘’செல்பி’ எடுக்க முயன்ற 16 வயது மாணவன் மரணமடைந்துள்ளான்..

‘’செல்பி’ எடுப்பதில் வெளிநாட்டவர்கள் வேறு ரகம்.துப்பாக்கியும், தோட்டாக்களும் அங்கு சர்வ சாதாரணம்.சிறு பிள்ளைகளும் அதை நம் தீபாவளி வெடி போல் உபயோகிப்பர்.

அமரிக்காவில் 43 வயது நபர் ஒருவர் ,தனது தோழியுடன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ‘’செல்பி’ எடுதுக்கொள்ள முற்ப்பட்டுள்ளார்.எப்பொழுதும் துப்பாக்கியில் உள்ள தோட்டாக்களை

எடுத்து விட்டுத்தான் படம் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம்.ஆனால் இம்முறை அவைகளை எடுக்க மறந்த காரணத்தினால் மரணத்தைத் தழுவினார்.

அடுத்த துப்பாக்கிச் சம்பவம்:. ஹூஸ்டன் நகரத்தில் 19 வயதுச் சிறுவன் துப்பாக்கியுடன் ‘’செல்பி’’ எடுத்து இறந்து போனான்.

திருவனந்தபுரத்தில் யானையுடன் ‘’செல்பி’’எடுத்துக்கொண்ட 37 வயது நபர் யானையின் தந்தத்தால் குத்தப்பட்டு,கால்களால் மிதிக்கப்பட்டு மிகுந்த காயங்களுடன் மருத்துவ மனையில்

அனுமதிக்கப்பட்டுள்ளதும் நாம் படித்து அறிந்த செய்தி.

ஆக தொழில் நுட்ப வளர்ச்சி ஆக்க பூர்வ சிந்தனைகளைத் தூண்ட வேண்டுமே தவிர ,அழிவுப் பாதைக்கு வழிவகுக்கக் கூடாது.

மேலும் படிக்க