• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏடிஎம் மிஷினில் பணத்துக்கு பதிலாக கொழுக்கட்டை !

September 20, 2018 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தி கடந்த செப்டம்பர் 13 வியாழன் அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, இந்தியா முழுவதும் விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் மஹாராஷ்டிரா புனேவில் சஹாகர் நகரில் ஏடிஎம் மிஷனில் பணத்திற்க்கு பதிலாக கொழுக்கட்டை வரும் வகையில் சஞ்சீவ் குல்கர்னி என்ற இளைஞர் புதிய மிஷின் ஒன்றை உருவாக்கி உள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மிஷினில் ஏடிஎம் கார்டை செலுத்தினால் பணம் வருவதற்க்கு பதிலாக கொழுக்கட்டை வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த மிஷினின் உள்ளே சிறிய அளவிலான விநாயகர் சிலையையும் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இளைஞர் குல்கர்னி கூறுகையில்,

நம் கலாச்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் இந்த புது முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.

மேலும் அவரிடம் கொழுக்கட்டை மட்டுமல்லாமல் நுகர்வோருக்கு பயன்படும் மற்ற பொருட்களுக்காகவும் இதுபோன்ற எந்திரங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர். குல்கர்னியின் இந்த புதுவித முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க