• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

June 11, 2018 தண்டோரா குழு

உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்

இந்தியாவின் 10-வது பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். தற்போது, உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி டெல்லி கிருஷ்ணா மார்க் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவர் இன்று திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இது வழக்கமான சோதனை தான் என்றும், வாஜ்பாயின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் வாஜ்பாயை பிரதமர் நரேந்திர நேரில் நலம் விசாரித்தார். அவருடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ. மூத்த நிர்வாகிகள் சென்றனர்.

மேலும் படிக்க