• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். மரியாதை

December 24, 2018 தண்டோரா குழு

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் அதிமுகவினர், எம்ஜிஆர் ரசிகர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.சென்னை எம்ஜிஆர் நினைவிடத்திலும் மக்கள் பலர் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்,மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

அதன்பின் எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதியை வாசித்தார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மக்கள் உறுதிமொழியை வாசித்தனர். அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவை நினைவாக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்போம் ஆகிய தீர்மானங்கள் உறுதிமொழியில் இடம்பெற்று இருந்தது.

மேலும் படிக்க