• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்.டி.சி மில்களை இயக்க வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

January 5, 2022 தண்டோரா குழு

இந்தியா முழுவதும் உள்ள என்.டி.சி மில்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு, தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத ஊதியமும் கடந்த 3 மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையடுத்து நாடு முழுவதிழுமுள்ள 23 என்.டி.சி மில்களில் பணியாற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேவ் என்.டி.சி மில்(SAVE NTC) என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு, என்.டி.சி மில்களை உடனே திறக்க வலியுறுத்தியும், தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

சச்சின் அகார் “என்.டி.சி மில்களை இயக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனவும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு ஆலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட்டு, மில்களை இயக்க அரசு முன்வராவிட்டால், பிரதமர் மோடியின் அகமதாபாத் இல்லத்தில் வீடு திரும்பா காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும் போது, கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக வருகிற குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றிய பின்பு தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், மில்களின் கருப்பு கொடி காட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க