August 11, 2017
தண்டோரா குழு
எனது தலைமையில் இரட்டை இலையை மீட்டு, கட்சியையும் கொடியையும் காப்போம்எனஜெ.தீபா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெ.அண்ணன் மகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இணைப்பு – பிணைப்பு – பிழைப்பு தேடிகளுக்கு மட்டுமே. இணைப்பு என்ற நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை இரு அணிகளும் ஏமாற்ற முடியாது. ஏமாற்றவும் விட மாட்டோம். அரியணையில் அம்மா விட்டுப் போன பணியானது எனது தலைமையில் தொண்டர்கள் ஆதரவுடன் நடைபெறப் போவது உறுதி. எனது தலைமையில் இரட்டை இலையை மீட்டு, கட்சியையும் கொடியையும் காப்போம் என ஜெ.தீபா கூறியுள்ளார்.