• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘எனக்குப் பிடிக்காத சொற்களில் ஒன்று ‘வேலைநிறுத்தம்’–ரஜினி

August 2, 2017 தண்டோரா குழு

கடந்த 3 மாதங்களாகவே பெப்சி அமைப்பினரின் சம்பள விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது. எனினும், அது குறித்து தயாரிப்பாளர் சங்கம் எந்த முடிவும் எடுக்கப்படாத பட்சத்தில் நேற்று முதல் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நேற்று ரஜினியின் ‘காலா’, விஜய்யின் ‘மெர்சல்’ உட்பட 40 படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 2ஆம் நாளான இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதற்கடையில், தொழிலாளர் நலத்துறை ஆணையர் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ரஜினி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்குப் பிடிக்காத சில சொற்களில் வேலைநிறுத்தம் என்பதும் ஒன்று என கூறியுள்ளார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுய கவுரவம் பார்க்காமல் பொது நலம் மட்டுமே கருதி அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம் என்றும் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தயாரிப்பாளர் சங்கமும் ஃபெஃப்சி சம்மேளனமும் கலந்து பேசி தீர்வு காண வேண்டுமென மூத்த கலைஞன் என்ற முறையில் கேட்டுக்கொள்வதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

முன்னதாக,ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இது குறித்து ரஜினியை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார் எண்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க