• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எந்த நிரபராதியும் தண்டிக்கப்பட கூடாது” – அற்புதம்மாள் டுவிட்

October 2, 2019

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தனர். எனினும் ஓராண்டுக்கு மேலாகியும் அந்த கோப்பு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து அவரது தயார் அற்புதம்மாள் டுவிட் செய்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“எந்த நிரபராதியும் தண்டிக்கப்பட கூடாது” என்று சொன்ன காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளிலாவது அறிவு உள்ளிட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க