• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எந்தவித புள்ளி விபரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீதம் கொடுத்து நியாமற்றது – ரத்தினசபாபதி

November 1, 2021 தண்டோரா குழு

கோவையில் பிற்படுத்தபட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்த நிலையில் இன்று நீதிமன்றம் பேராணை வழங்கியுள்ளது.
பிற்படுத்தபட்டோருக்கான ஆணையத்தில் சில சமூகத்தினர் மட்டுமே தலைவர்களாக இருகின்றார்கள் என தெரிவித்தார். கடந்த முறை அதிமுக அரசு எந்த சட்டத்திற்கும் உட்படாமல் தேர்தலுக்காக வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அம்பாசங்கர் அறிக்கையின் அடிப்படையில் அறிவித்தது என கூறிய அவர் பிற்படுத்தபட்டோர் சமூகத்தில் ஒரு அரசு உத்தியோகம் கூட பெறாமல் 28 சமூகங்கள் இன்றளவும் உள்ளதாக கூறினார்.

மேலும் கடந்த அரசு கொண்டு வந்த இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தார். மேலும் எந்தவித புள்ளி விபரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீதம் கொடுத்து நியாமற்றது எனவும் கூறினார். இதில் அதிமுக அரசும் திமுக அரசும்
பிழைகள் செய்து உள்ளதாகவும் கூறினார். இந்த பேராணையை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அதை எதிர்த்து சட்டரீதியாக எதிர்த்து போராடுவோம் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 60 ஆயிரம் வேலை வாய்ப்பு உருவாக இருப்பதாகவும் அந்த வேலை வாய்ப்பு பறிபோகாமல் இந்த தீர்ப்பு தடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார் தெரிவித்த அவர்
இம்முறை கவனிக்காமல் விட்டால் 30 ஆண்டுகளுக்கு பிற்படுத்தபட்டோருக்கான அரசு வேலை வாய்ப்புகள் பறிபோகும் என கூறினார். இது தொடர்பாக முதல்வரை சந்திக்க முயன்றும் இதுவரை சந்திக்காதது வருத்தம் அளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க