• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எடப்பாடி பழனிச்சாமியை விட வேலுமணி புத்திசாலி – புகழேந்தி

September 20, 2023 தண்டோரா குழு

சௌரிபாளையம் பகுதியில் அதிமுக – ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இரண்டு முன்று தினங்களாக காமெடியாக ,கைதட்டல், விசில் என போகின்றது எனவும்,சிங்க கூட்டம், சிறு நரி கூட்டம் என பல டயலாக் பேசினார்கள், கூட்டணி முடிந்துவிட்டது என்றும் சொன்னார்கள் எனவும்,கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமாரும் கூட்டணி முறிந்து விட்டது என சொல்லிவிட்டார் என தெரிவித்தார்.

ஜெயக்குமார் கொடுத்த ஸ்டேட்மென்டிற்கு எதிராக, கட்சிகாரர்களை அமைதியாக இருக்க சொல்லிட்டார் எடப்பாடி பழனிச்சாமி எனவும் தெரிவித்தார்.ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய், மனைவி உயர்த்தவர்கள், அண்ணா ஓடி ஓளிந்தார் என பேசுகின்றார் அண்ணாமலை, எனவும்
இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை அவர் செய்கின்றார் எனவும் தெரிவித்தார்.

ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் தங்களது நிலைப்பாடுகளை மாற்றக்கொள்ள கூடாது எனவும், எடப்பாடி பழனிச்சாமி இப்போது எல்லாரையும் வாயை மூட சொல்லிட்டார் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து அமைதியாக இருக்க சொல்லி எந்த அறிக்கையும் வரவில்லையே என்று கேட்டதற்கு, தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் போனது என்று பதில் அளித்தார். மேலும் பா.ஜ.க வுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதி படுத்தவேண்டும் எனவும் , இதில் ஏன் அமைதியாக இருக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். அப்படி உறுதிபடுத்தினால் எடப்பாடி சிறைக்கு போவார் என தெரிவித்த அவர், கோடநாடு கொலை வழக்கில் ஏன் எடப்பாடி பழனிச்சாமி மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

எஸ்.பி.வேலுமணி நல்ல பீல்டு ஓர்க்கர் எனவும்,எடப்பாடி பழனிச்சாமியை விட வேலுமணி புத்திசாலி எனவும் தெரிவித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி மீது ஏராளமான வழக்குகள் இருக்கின்றது எனவும், ஆனால் அவற்றின் மீது மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகழேந்தி தெரிவித்தார்.

மேலும் படிக்க