• Download mobile app
01 Jul 2026, WednesdayEdition - 3794
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரவையில் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிர்ப்பு – காங்கிஸ் முடிவு

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை: சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர்‌ எடப்பாடி கே.பழனிச்சாமி அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அவருக்கு எதிராக வாக்களிக்க தமிழ்நாடு காங்கிஸ் கட்சி முடிவு செய்தது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க 15 நாள் அவகாசம் வழங்கியனார்.

அதைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரியிருக்கிறார். இது தொடர்பாக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதரணி, சட்டப்பேரவை குழு தலைவர் ராமசாமி உள்ளிட்ட 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க