• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எகிப்தில் 2000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு!

August 17, 2017 தண்டோரா குழு

எகிப்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான 3 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டின் தென் கைரோவின் நைல் மாகணத்திலுள்ள அல் காமின் அல் சஹரவி என்னும் இடத்தில், சுமார் 2000 ஆண்டுகள் பழமையான 3 கல்லறகளை எகிப்து தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த கல்லறைகளில் பலவிதமாக சவப்பெட்டிகள் மற்றும் பல களிமண் துண்டுகள் அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில், அந்த இடம் ஒரு பெரிய கல்லறையாக இருந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த கல்லறையில் மனித முகம் செதுக்கப்பட்ட 4 சவபெட்டிகள் இருந்தது. மற்றொரு இடத்தில் சுமார் 6 கல்லறைகள் இருப்பத்தையும் இறந்த சிறு குழந்தைகளை அடக்கம் செய்யும் இடத்தையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கி.மு. 525ம் ஆண்டில் எகிப்து நாட்டை பாரோ அரசர்கள் ஆட்சி செய்தனர். அதற்கு பிறகு கி.மு 323 முதல் 4ம் நூற்றாண்டு வரை கிரேக்க மன்னர்கள் எகிப்து நாட்டை ஆட்சி செய்தனர். அந்த கல்லறையில் கண்டெடுத்த களிமண் துண்டுகள், கி.மு. 525ம் ஆண்டு மற்றும் 4ம் நூற்றாண்டு காலத்திற்கு இடையே ஆன காலத்தை சேர்ந்தது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

“அந்த கல்லறையிலிருக்கும் ஆண், பெண், குழந்தைகள் உடல்கள் வெவ்வேறு காலத்தை சேர்ந்ததாக இருந்தது. அது குறித்து பல தகவல்களை கண்டுபிடிக்க, அந்த இடத்தில் வேலைகள் மும்முரமாக நடந்தது வருகிறது” என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க