• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யில் முதலை தாக்கி பெண் பலி

June 8, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் 2௦ வயது பெண்ணை முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்திலுள்ள சாகர்நகர் நகரில் தேசிய சாம்பல் சரணாலயம் உள்ளது. அதன் அருகிலுள்ள நதியின் கரையில் நீரஜ் குளித்துக்கொண்டிருந்த போது நதியிலிருந்த முதலை ஒன்று அவரை தாக்கியுள்ளது. இதைக்கண்ட அவருடைய குடும்பத்தினர் சத்தம் போட்டுள்ளனர்.முதலை நீரஜை தண்ணீருக்குள் இழுத்து சென்றுவிட்டது.

உடனே, அவருடைய பெற்றோர்கள் சரணாலயதிலுள்ள அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே அவர்களும் அந்நகரின் காவல்துறை உதவியுடன் நீராஜின் உடலை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.

நீரஜின் குடும்பத்தினர் கூறுகையில்,

“நீரஜ் ஏகதாசி நாளை விரதம் இருந்து அனுசதிரித்து வந்தாள். நதியில் குளித்துவிட்டு வருவதற்காக நீரில் இறங்கினாள்” என்று தெரிவித்தனர்.

“முதலைகள் முட்டையிடும் காலமிது. சரணாலயம் அருகில் முதலைகள் முட்டையிட்டிருக்கலாம். இதை அறியாத நீரஜ், அந்த இடத்திற்கு அருகில் குளிக்க சென்றிருக்கலாம். இதனால் முதலை அவரை தாக்கியிருக்கலாம். பெண் முதலைகள் தங்கள் முட்டைகள் மற்றும் குஞ்சு பொரிக்கும் வரை அதிக கவனத்தோடு பாதுகாப்பு தரும். கோடை காலத்தில் மக்கள் நதி கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்”

தேசிய சாம்பல் சரணாலயம் நூற்றுக்கணக்கான முதலைகளுக்கு வீடாகும். சுமார் 5௦௦ முதலைகள் அங்கு இருந்ததாக கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. சாம்பல் நதியில் தண்ணீர் அளவு குறைந்து வருவதால், அதில் வாழும் மீன்கள் மற்றும் நீர் வாழ் விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதன் காரணமாக முதலைகளின் தாக்குதல் அதிகரித்து வருவதாக சுற்றுசூழல் ஆர்வலர் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க