• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய்க்கான டிஜிட்டல் குடை பிரச்சாரம் துவக்கம்

February 4, 2020

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மாநகராட்சி ஆணையாளர் புற்றுநோய்க்கான டிஜிட்டல் குடை பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி சர்வதேச உலக புற்று நோய் கட்டுப்பாட்டு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் புற்று நோயை தடுத்து பல லட்சம் நபர்கள் இறப்பதை தடுக்கவும்,புற்று நோயை தடுத்து உயிரை காக்கும் சிகிச்சையை மேற்கொள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் டிஜிட்டல் குடை பிரச்சாரத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார்.இந்த குடையில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் புற்று நோய் குறித்த செய்திகளை முன்பே கண்டறிதல், எச்சரிக்கை குறியீடு ,சுய பரிசோதனை போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

எஸ்என்ஆர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் லட்சமி நாராயணசாமி பேசுகையில்,

புற்றுநோய் கண்டறிய வேண்டிய அவசியம் மற்றும் புற்று நோயை முற்றிலும் ஒழிக்கவும் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகவும், இதோடு ஒரு இணையதளத்தை உருவாக்கி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க