• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பந்தை எடுத்து கொடுத்த மாணவிக்கு பாராட்டு விழா

June 27, 2018 தண்டோரா குழு

உலக கோப்பை கால்பந்து போட்டியில்,பந்தை எடுத்து கொடுப்பதற்காக தேர்வாகி ரஷ்யா சென்று வந்த கோத்தகிரியை சேர்ந்த மாணவிக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கோத்தகிரியை சேர்ந்த பள்ளி மாணவி லதான்யா ஜான் என்பவர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்கத்தின் போது பந்தை கால்பந்து வீரர்களுக்கு எடுத்து கொடுக்கும் நிகழ்விற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.குறிப்பாக 1600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில் அதில் இருந்து இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் தேர்வாகி இருந்தனர்.

இந்த தேர்வானது பல்வேறு கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டது.அதில் கோத்தகிரியை சேர்ந்த லதான்யாவும் ஒருவர்.பின்னர் அவர் பிரேசில் அணி விளையாடிய போட்டியின் துவக்கத்தில் பந்தை எடுத்து கொடுத்து போட்டியை துவக்கி வைத்தார்.இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு கெளரவத்தை ஏற்படுத்திய லதான்யாவிற்கு கோவையில் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.தமிழகத்தை சேர்ந்த மாணவி உலக கோப்பை விளையாட்டு போட்டியில் ஒரு அங்கமாக இருந்தது பெருமையளிப்பதாக லதான்யா தெரிவித்தார்.

மேலும் படிக்க