September 8, 2018
தண்டோரா குழு
உலக அளவில் விமான பயணத்தில் இங்கிலாந்து , ஜெர்மனி நாட்டினரை பின்னுக்கு தள்ளி இந்தியர்கள் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
விமான பயணம் தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் ஒரு ஆய்வு செய்துள்ளது. இதில் கடந்த 2017-ம் ஆண்டில் உலக அளவில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் இந்தியர்கள் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் விமானங்களில் பயணம் மேற்கொண்டனர். இது, உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களில் பயணம் செய்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையாகும். இதில், அதிகபட்சமாக அமெரிக்கர்கள் 63.2 கோடி பேரும், சீனர்கள் 55.5 கோடி பேரும், இந்தியர்கள் 16.1 கோடி பேரும் விமானத்தில் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைபோல், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் 14.7 கோடி பேரும் மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் 11.4 கோடி பேரும் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இங்கிலாந்து , ஜெர்மனி நாட்டினரை இந்தியர்கள் பின்னுக்கு தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். 2016-ம் ஆண்டில் விமான பயணம் மேற்கொள்ளும் நாட்டினர் பட்டியலில் இந்தியர்கள் 4-வது இடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
.