• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடும் தோளாடு தோள் கொடுக்கும் – மோடி

February 14, 2019 தண்டோரா குழு

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடும் தோளாடு தோள் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகாரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 30 ஆக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர்.

இந்நிலையில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடும் தோளாடு தோள் கொடுக்கும். சி.ஆர்.பி.எப் வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
அதைபோல், சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது, கண்டிக்கத்தக்கது; மரணமடைந்த வீரர்களுக்கு நாடே வீரவணக்கம் செலுத்துகிறது என டுவிட்டரில் அருண் ஜெட்லி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பயங்கரவாத தாக்குதலில் 30 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நாளை ஸ்ரீநகர் செல்கிறார்.

மேலும் படிக்க