• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை பேருந்து விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்திப்பு

June 15, 2018 தண்டோரா குழு

அரசு பேருந்துகள் சரியான முறையில் பாராமரிக்கப்படாத காரணத்தால் தான் உதகையில் பேருந்து விபத்து ஏற்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

உதகையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது பேசிய அவர்,

பேருந்து கவிழ்ந்த விபத்தில் கோவையில் 15 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 பேர் உடல் நலம் தேறி வீட்டுக்கு சென்றுள்ளதாகவும்,இருவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும்,வால்பாறையில் சிறுத்தை தாக்கிய பெண்ணிற்கும்,கூடலூரில் யானை தாக்கிய ஒருவருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும்,விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கவும் மருத்துவக் குழுவிற்கு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 900 பேருக்கு விபத்துக்களால் உண்டான பாதிப்புகளுக்கும், இயற்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல விபத்தில் இறந்த மற்றும் காயமுற்றவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என்றார்.

மேலும் படிக்க