July 20, 2017
தண்டோரா குழு
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் உண்டியலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை ரயில்நிலையம் வாசல் அருகே விநாயகர் கோவில் உள்ளது. தினமும் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் வேலைக்கு வருவோர் அதிகம்.
அவ்வாறு வருபவர்கள் மற்றும் பிற பயணிகள் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களால் இயன்ற காணிக்கைகளை தினமும் செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.
இதனிடையே பரப்பரப்பாக காணப்படும் ரயில்நிலையம் விநாயகர் கோவில் உண்டியல் அருகே நின்று கொன்று ஒருவர் பபுள்கம் மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அவரை பிடித்து ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுக்குறித்து காவல்துறையினர் அவரிடம் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.