• Download mobile app
12 Jun 2026, FridayEdition - 3775
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்ரைனில் டிரம்ப் பீர் அறிமுகம்

May 23, 2017 தண்டோரா குழு

கிழக்கு ஐரோப்பாவிலுள்ள உக்ரைனில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பின் பெயரில் பீர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உக்ரைனில் லிவிவ் நகரில் பிரவாடா என்ற பீர் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனம் ஒரு பீர் வகையை உருவாக்கி அதற்கு “பிரிவினைவாத அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்” என்று பெயர் சூட்டியுள்ளது.

“Make America Great” என்று அச்சிடப்பட்ட தொப்பியுடன் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருப்பது போன்றும், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையே சுவர் இருப்பது போன்றும் மற்றும் “Home Alone” என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் கதாநாயகன் கெவின் மெக்கல்லெஸ்டர் புகைப்படம் அந்த பீர் நிறுவனத்தின் அடையாளத்தில் காணப்பட்டன.இந்த திரைப்படத்தில் சிறிய வேடத்தில் டிரம்ப் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பீர் ஒரே மாதத்தில் பிரபலமானது. இதற்கு முன்பதாக, இதே பீர் நிறுவனம் ரஷ்ய அதிபர் புதின்,மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மார்க்கெல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பெயரிலும் பீர் தயாரித்து விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க