• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய்கள் கருத்தடை மையம் திறப்பு

December 7, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மேயர் கல்பனா ஆனந்தக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.

மேலும்,சாலை மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆதரவற்ற கால்நடைகளை பிடிப்பதற்காக புதிய வாகனத்தை மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கோவை மாநகராட்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சீரநாய்க்கன்பாளையம்,ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையங்கள் மூலம் கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 2300 ஆதரவற்ற நாய்களை பிடித்து சட்டப்படி கருத்தடை செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.445 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதம் முதல் ரூ.700 ஆக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடிப்பதற்கும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஆதரவற்ற கால்நடைகளை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிச்செல்வன்,துணை கமிஷனர் ஷர்மிளா, சுகாதார குழுத்தலைவர் மாரிச்செல்வன், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க