• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் ஜி.எம்.நகரில் செல்போன் தர மறுத்த பெண்ணை வீட்டில் வைத்து பூட்ட முயன்ற இளைஞர்

February 24, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம், ஜி எம் நகர் பகுதியில் வீடுகளுக்கு வெளியே தாழ்ப்பாளிட்டு கொண்டிருந்த வட மாநில இளைஞர். பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் அருகில் இன்று காலை வட மாநில வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த பெண் ஒருவரிடம் போன் செய்ய செல்போன் கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு அந்த பெண் செல்போனை தராமல் வீட்டினுள் சென்று விட அந்த வட மாநில வாலிபர் வீட்டில் கேட்டை தாழிட்டுள்ளார்.இதனை கண்ட அருகில் இருந்த மக்கள் சந்தேகமடைந்து அந்த வாலிபரை பிடித்து காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர்.இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராகுல்(18) எனவும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.போலிசார் விசாரணையில் அந்த வாலிபர் ஊருக்கு செல்ல பணமில்லாமல் இருந்ததால் அன்பு இல்லத்திற்கு ரயில்வே காவல்துறையினர் அனுப்பி வைத்ததும் அன்பு இல்லத்தில் இருந்து தப்பி வந்து அப்பகுதியில் இருந்த பெண்ணிடம் செல்போன் கேட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தற்போது அந்த வாலிபர் உக்கடம் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார். தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க