• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்

November 9, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் மழையால் குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் உக்கடம் பகுதியில் கழிவு நீர் லாரி அங்கு கழிவுகளை கொட்டுவதால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வைரஸ் நோய், பன்றி காய்சலால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதற்காக உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.உக்கடத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது. தெருநாய்கள் பொதுமக்களை கடித்து வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மூதாட்டி மற்றும் சிறுமியையும் நாய் கடித்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்கடம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

சாலை மறியல் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனால் உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க