• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷா யோக மையத்தை வந்தடைந்தார் சத்குரு!வழிநெடுகிலும் கிராம மக்கள், தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு

April 2, 2024 தண்டோரா குழு

புதுடெல்லியில் மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு (ஏப்ரல் 1) கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார்.

பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர். மேலும், சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது.

ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

டில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவை வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் விமான நிலையத்தில் திரண்டனர். இதுதவிர, வழிநெடுகிலும், சாலை ஓரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தாணிக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன பெண்மணி,விஜயா கூறுகையில்,

‘எங்களுடைய கிராம மக்கள் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு சத்குரு தான் காரணம். அவரால் தான் எங்களுடைய பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. அவர் கற்றுக்கொடுத்த யோகா மூலம் பல இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளி வந்துள்ளனர்.இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். அந்த ஆபத்தில் இருந்து சத்குரு மீண்டு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கூடிய விரைவில் முழு நலன் பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை’ என்றார்.

இந்த தருணத்தில் அனைவரிடம் இருந்தும் சத்குருவிற்கு கிடைத்த அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் ஈஷா அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.

மேலும் படிக்க