• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

February 28, 2019 தண்டோரா குழு

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. மூன்று அணியினரும் இரட்டை இலை சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதற்கிடையில் ஒபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றாக இணைந்தது.

இதனால் தினகரன் அணி மற்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி இரட்டை இலை சொந்தம் கொண்டாடியது. பின்னர் நடைபெற்ற பல கட்ட விசாரணைக்கு பிறகு இறுதியில் நவம்பர் 23,2017 அன்று அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான காரணங்களையும் வெளியிட்டது.

இந்நிலையில் தினகரன் அம்மா மக்கள் முனேற்ற கழகம் என்ற தனி கட்சிய தொடங்கினார். இருப்பினும் இரட்டை இலையை மீட்டு அதிமுகவை கைப்பற்றுவது தான் எனது குறிக்கோள் என்று கூறியிருந்தார்.இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானதே என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், டிடிவி தினகரன் – சசிகலா தரப்பு தனித்தனியே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க