• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இல்லம் தேடி கல்வித் திட்டம் – கோவையில் 500 கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக சேர்ப்பு

December 15, 2021 தண்டோரா குழு

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில், குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் தன்னார்வலர்களாக 500 கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதை ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்து பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் 9 கலைக் குழுக்கள் மூலம், 15 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தற்போது வரை 500 கல்லூரி மாணவ-மாணவிகள் தன்னார்வலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் 2089 குடியிருப்புகளில், 1 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். அதனால் 8,200 தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது வரை 6,471 பேர் பதிவு செய்துள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்ட பணிகளை திறம்பட செயல்படுத்த மாவட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செல்போன் செயலி மூலம் தன்னார்வலர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க