• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை பயணம் ரத்து; இதை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

March 25, 2017 தண்டோரா குழு

திருமாவளவன் , வை.கோ, வேல்முருகன் ஆகியோரது கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினி தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார். இதை வைத்து அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் ஞானம் அறக்கட்டளை சார்பில் ரூ.22 கோடி செலவில் இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம், புளியங்குளம் பகுதிகளில் 150 வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9ம் தேதி இலங்கை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருந்தார்.

இந்நிலையில், திருமாவளவன் , வை.கோ, வேல்முருகன் ஆகியோர் ரஜினி இலங்கை செல்லக் கூடாது என அவரை வலியுறுத்தினர். இதையடுத்து அவரகளது கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினி தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இத்தருணத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டு கொண்டுள்ளார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழு மனதாக ஏற்று கொள்ளாவிட்டாலும் அவர்களின் வேண்டுகோளுக்காக நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.

அதேசமயம் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், திருமாவளன் சொன்னதை போன்று மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை. இனி வரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டு கொள்கிறேன்.

இதுமட்டுமின்றி, தமிழக மீனவர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண இலங்கை அதிபர் சிறிசேனவை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன்.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

மேலும் படிக்க