August 3, 2020
தண்டோரா குழு
இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றபட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல் பிரபல பாதாள நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோவையில் கடந்த ஜூலை 3ம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் போலி ஆதார் கார்டில் பிரதீப்சிங் என்ற பெயரில் வாழ்ந்து வந்தாகவும், மதுரையில் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் நேற்று கோவையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அங்கொடா லொக்கா உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுந்ததை அடுத்து அங்கொடா லொக்கா தொடர்பான வழக்கு கோவை பீளமேடு போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.