• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரு அணிகள் இணைப்பு நாளைக்கு கூட சாத்தியமாகலாம் – டிடிவி தினகரன்

August 4, 2017 தண்டோரா குழு

இரு அணிகளையும் இணைக்க முயற்சித்து வருகிறேன், விரைவில் நல்ல செய்தி வரும்இணைப்பு நாளைக்கு கூட சாத்தியமாகலாம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் அதிமுக அம்மா அணிக்கு புதிய அமைப்பு செயலர்களை இன்று நியமித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம், நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட நிர்வாகிகள் நியமனம்., கட்சியில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் கட்சியின் தலைமை அலுவலகம் செல்வேன்.

60 நாட்கள் நேரம் கொடுத்த பின்பே புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.கட்சியில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நான் கட்சி அலுவலகத்திற்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது. தேவைப்படும் போது எப்போது வேண்டுமானாலும் தலைமைக் கழகம் செல்வேன்.

கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கே உள்ளது. அமைச்சர்கள் பேச்சை கேட்டு இரண்டு மாதங்கள் அமைதியாக இருந்தேன்.நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். அமைதியாக இருந்தது அடங்கிப்போவது அல்ல.

நான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அணிகள் இணைப்பை நாங்கள்தான் செய்ய வேண்டும். ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தை தற்போது அறிவித்துள்ளேன். புதிய நிர்வாகிகள் ஒன்று சேர்ந்துதான் செயல்படுவார்கள்.

பொறுப்பான பதவியிலுள்ள நான் பொறுப்பற்ற முறையில் நடக்கமாட்டேன், ஆனால் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றார்.

மேலும், அமைச்சர்கள் வகித்து வரும் கட்சிப் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை. நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய விஷயம். அமைச்சர் ஜெயக்குமாருக்கு பயம் அதிகமாகவே இருக்கிறதுஇரு அணிகளையும் இணைக்க முயற்சித்து வருகிறேன், விரைவில் நல்ல செய்தி வரும்இணைப்பு நாளைக்கு கூட சாத்தியமாகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க