• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயந்திரத் தட்டுப்பாட்டால் சிறு வியாபாரிகள் பாதிப்பு

January 2, 2017 ஜாகர்

சிறிய வணிகக் கடைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு உதவும் வகையில், கார்டு தேய்க்கும் இயந்திரங்களை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். கார்டு தேய்க்கும் இயந்திரங்கள் இல்லாததால், வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நாட்டில் பணப்புழக்கம் குறைந்து வருகிறது. இதனால், உணவு விடுதிகள், பெரிய வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், திரையரங்குகள் உள்பட பல இடங்களில் கார்டு தேய்க்கும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பணப்புழக்கம் குறைந்துவிட்டதால் விற்பனை பாதிக்காமல் இருப்பதற்காக பெரிய வணிக நிறுவனங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் விதமாக கார்டு தேய்க்கும் இயந்திரத்தை அதிகமாகப் பயன்படுத்த முடிகிறது. ஆனால், சிறிய அளவில் காய்கறி-மளிகைக் கடை, பெட்டிக் கடை வைத்திருக்கும் வியாபாரிகளின் பார்வையும் தற்போது ‘கார்டு தேய்க்கும் இயந்திரம்’ பக்கம் திரும்பியுள்ளது.

ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக கார்டு தேய்க்கும் இயந்திரங்களுக்கு எந்த விதமான வாடகையோ கட்டணமோ தற்போது வசூலிக்கபட்டாது என அறிவித்துள்ளது. அத்துடன் டெபிட், கிரெடிட் கார்டுகளின் மூலம் பொருட்கள் வாங்குவோருக்குப் பரிசுத் தொகையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வங்கிகளில் கார்டு தேய்க்கும் இயந்திரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. கோவை மாவட்ட சிறு, குறு வியாபாரிகளும் தற்போது பெருமளவில் கார்டு தேய்க்கும் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பங்களை வங்கிகளில் அளித்துள்ளனர். எனினும், இயந்திரங்களைச் சிலர் வாங்கி விட்டனர். இயந்திர தட்டுப்பட்டால் பெரும்பாலனோர் இன்னும் வாங்கவில்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சாதாரண மளிகைக் கடைகளிலும் இனி கார்டு தேய்க்கும் இயந்திரம் வந்துவிடும்.

இது குறித்து கோவை வீரபாண்டி பகுதியில் மளிகைக் கடை நடத்திவரும் செ. சூர்யா கூறுகையில்,

“பிரதமரின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கார்டு வழியான பணப் பரிமாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நகரங்களில் மட்டும் அதிக பயன்பாட்டில் இருந்து வந்த கார்டு தேய்க்கும் இயந்திரத்தின் பயன்பாடு தற்போது சிறு நகரங்கள், கிராமப்புற பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. சில்லறை ரூபாய் நோட்டு சிக்கல் காரணமாக வணிகம் முடங்காத வகையில் இந்த கார்டு தேய்க்கும் இயந்திரம் கைகொடுக்கிறது. தற்போதுள்ள நிலையில் இயந்திரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்த அனைவருக்கும் இயந்திரம் கிடைக்க மத்திய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கார்டு தேய்க்கும் இயந்திரம் பெறுவது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

“கார்டு தேய்க்கும் இயந்திரம் கோரி விண்ணப்பிக்கும் வியாபாரிக்கு, எந்த வங்கியில் விண்ணப்பிக்கிறாரோ அந்த வங்கியில் கண்டிப்பாக அவருக்குக் கணக்கு இருக்க வேண்டும். பின்னர், வங்கியில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தில் தொழில் விவரம், வியாபாரியின் பெயர், புகைப்படம், வீடு-கடை முகவரி, தொலைபேசி, செல்போன் எண் மற்றும் கடந்த 3 ஆண்டுகள் கடையின் விற்பனை, லாப-நஷ்டம் போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
வியாபாரிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவம் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கிருந்து கார்டு தேய்க்கும் இயந்திரம் தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் கொடுக்கப்படும். இயந்திரங்கள் குறைந்தபட்சம் 20 நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் இயந்திரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விற்பனை அதிகம் நடைபெறும் கடைகளுக்கு முதலில் வழங்குவதற்கு முன்னூரிமை அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறை”.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“முறைகேடாக நடைபெறும் பணப் பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கையாக கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், கார்டு தேய்க்கும் இயந்திரங்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க