• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இம்மாத இறுதிக்குள் ரூ.2,000 சிறப்பு நிதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்- முதல்வர் பழனிசாமி

February 12, 2019 தண்டோரா குழு

ஏழைக்குடும்பங்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் வழங்கப்படும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஏழைக்குடும்பங்களுக்கு 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று அந்த உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்று திமுக எம்.எல்.ஏ பேரவையில் கேள்வி எழுப்பினார். அப்போது இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி, ‘’இந்த மாத இறுதிக்குள் ஏழைக்குடும்பங்களூக்கு வங்கிக்கணக்கில் 2 ஆயிரம் செலுத்தப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களூக்கு வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்படும்’’என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க