• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்போஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக சாலில் நியமனம்

December 2, 2017 தண்டோரா குழு

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக சாலில் எஸ் ப்ரேக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த விஷால் சிக்கா, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு, தற்காலிக நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக தலைவராக யுபி பிரவின் ராவ் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் வகித்து வரும், பதவியிலிருந்து 2018ம் ஆண்டு, ஜனவரி 2ம் தேதி விலகுவதால், அந்த பதவிக்கு சாலில் எஸ் ப்ரேக் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சாலில் காப்ஜெமினி நிறுவனத்தின் நிர்வாக குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும், கார்நெல் பல்கலைக்கழகத்திலிருந்து கணினி அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டமும், மெக்கானிக்கல் பொறியியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். மேலும், ஐஐடி மும்பை நிறுவனத்திலிருந்து ஏரோநாடிகல் பொறியியல் பாடத்தில் இளநிலை பாடமும் பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க