• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி அனுமதியின்றி போர்வெல் அமைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் – கோவை மாநகராட்சி எச்சரிக்கை

October 28, 2019 தண்டோரா குழு

இனி அனுமதியின்றி போர்வெல் அமைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு ஆழ்துளை ஒழுங்காற்று விதி 2015ன் படி அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதும், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடாமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். கோவை மாநகராட்சி பகுதியில் கைவிடப்பட்ட பராமரிப்பில்லாத ஆழ்துளை கிணறுகள், மூடப்படாத திறந்த வெளியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள உறைகிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றை நில உரிமையாளர்கள் அல்லது கிணறு அமைத்த சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக மூடவேண்டும். தவறுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நவடிக்கை எடுக்க நேரிடும். இனி வரும் எதிர்காலத்தில் அனுமதியின்றி போர்வெல் மற்றும் உறைகிணறுகள் அமைப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க