July 20, 2017
தண்டோரா குழு
இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்தகமல் இந்தி படத்தில் ஏன் நடித்தார்என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகரில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பிரதமர் மோடி வரும் 27 ல் ராமேஸ்வரம் வர உள்ளார். இதற்காக நாளை ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்ஆய்வு செய்ய உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் தான் வெற்றி பெறுவார். எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதிகளில் பணி செய்த பின்னர் சம்பள உயர்வு அளித்திருக்கலாம் என்றார்.
மேலும்,கமல் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அவர் வந்துதான் தமிழக அரசியலை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்ததாக சொல்லும் கமல் ஏன் இந்தி படத்தில் ஏன் நடித்தார் என கேள்வி எழுப்பினார்.