• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமனம்

July 18, 2017 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக சஞ்சய் பங்கர், பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அப்போது, பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான் மற்றும் வெளிநாட்டு தொடரின் பேட்டிங் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின்பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேநேரம், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் மற்றும் உதவி பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் ஆகியோர் தொடருவார்கள் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்வரை அந்த பதவியில் தொடருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான் மற்றும் வெளிநாட்டு தொடரின் பேட்டிங் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க