• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்

February 26, 2021 தண்டோரா குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழகம் கண்ட சீனியர் அரசியல்வாதிகளில் ஒருவர். கம்யூனிச சித்தாந்தங்களில் மாறாத பற்று கொண்டவர் தா.பாண்டியன்.
இவர் உடல் நலக்குறைவு காரணமாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 தினங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமானது.இதையடுத்து டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.சிறுநீரக தொற்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிப்ரவரி 26ம் தேதியான இன்று காலை, தா.பாண்டியன் காலமானார். இதை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 89. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க