• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் முதன்முறையாக கீர்த்திலால் ஜூவல்லரியில் தனித்துவமிக்க “பரிதி” எனும் கலெக்ஷன் அறிமுகம் !

December 8, 2021 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை பகுதியில் செயல்பட்டுவரும் கீர்த்திலால் நிறுவனம், இந்தியாவில் முதன்முறையாக தனித்துவமிக்க “பரிதி” எனும் கலெக்ஷனை இன்று அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பெரும் மதிப்பை பெற்ற கீர்த்திலால்ஸ் நிறுவனத்தில் பரிதி என்னும் பெயரில் தனித்துவமிக்க ஆபரண தங்கத்தை இன்று இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நகைகளை திரைப்பட நடிகை பிரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிமுகம் செய்து, வைத்தார்.

இது குறித்து கீர்த்திலால்ஸின் இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் கூறுகையில்,

இத்தருணத்தில் எமது சமீபத்திய கலெக்ஷன் பரிதியை அறிமுகம் செய்வது அளவற்ற மகிழ்ச்சியை எனக்குத் தருகிறது. எமது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை தீவிரமாக சார்ந்திருக்கும் நாங்கள்,எமது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான, புதுமையான ஸ்டைலில் ஆபரணங்களை வழங்க விரும்புகிறோம். பரிதி கலெக்ஷன் என்பது, எவரும் அணியக்கூடியவாறு நெகிழ்வுத்திறன் தொழில்நுட்பத்துடன் தனித்தன்மை வாய்ந்த குளோஸ் செட்டிங்ஸ் வளையல்களின் தொகுப்பாகும்.

இந்தியாவில் முதன் முறையாக இது அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்தில் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களால் இந்த வளையல்களை அணியமுடியும் என்பதால், காலங்களைக் கடந்து, நிலைத்து நிற்பவையாக இவைகள் திகழ்வதற்கு இந்த நெகிழ்வுத்திறன் தொழில்நுட்பம் உதவியிருக்கிறது என்று கூறினார்.

இந்த நிகழ்வின்போது வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து வைர ஆபரணங்கள் மீதும் ஒரு காரட்டுக்கு ரூ.10,000 என்ற சிறப்புத் தள்ளுபடி சலுகையை கீர்த்திலால்ஸ் நீட்டித்திருக்கிறது.

மேலும் படிக்க