• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் உற்பத்தி திறனைவிட இஸ்ரேல் மிகவும் குறைவு – இஸ்ரேல் தூதர் தானா குர்ஸ்

January 29, 2020

இந்தியாவின் உற்பத்தி திறனைவிட இஸ்ரேல் மிகவும் குறைவு என இஸ்ரேல் தூதர் தானா குர்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா இஸ்ரேல் இணைந்து நடத்தும் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட இஸ்ரேல் தூதர் தானா குர்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

இந்தியா இஸ்ரேல் இடையேயான உறவு பல ஆண்டுகளாக தொடர்வதாகவும் அதிலும் முக்கியமாக பாதுகாப்பு துறையில் நல்லுறவு நீடிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் உற்பத்தி திறனைவிட இஸ்ரேல் மிகவும் குறைவு என்றாலும், இந்தியாவுக்கான உற்பத்தி துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்குவதில் முக்கிய பங்கு இஸ்ரேல் வகிப்பதாகவும் தெரிவித்தார். முன்னர் தண்ணீர் பஞ்சம் உள்ள நாடாக இருந்த இஸ்ரேல் இன்று 86% தண்ணீரை மறுசுழற்சி செய்து தன்னிறைவு அடைந்து உலகிலேயே தன்னிறைவு கொண்ட நாடாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஜவுளி பம்ப்செட் போன்றவற்றை இஸ்ரேலுக்கு தேவையான அளவு அளித்து பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க