• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

February 21, 2020

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நசரத்பேட்டை போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர். மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கும் நடிகர் கமலஹாசனுக்கும் இச்சம்பவம் குறித்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க