• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை – கோவையில் வேலூர் இப்ராஹிம் பேட்டி

December 30, 2020 தண்டோரா குழு

திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தை இழுவுபடுத்தினால் அவருக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

மத நல்லிணக்கம் தமிழகத்தின் நீடித்து வரும் அருமையான நிகழ்வு ஆனால் 20 ஆண்டுகளாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் நல்லிணக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் மற்றும் திராவிட அரசியலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மத நல்லினக்கத்தை நாங்கள் முன்னெடுக்கும் போது, விசிக., தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். ஈவேரா செய்த காரியத்தை தான் திருமாவளவனும் செய்கிறார். திருக்குறானுக்கு எதிராக பேசியிருக்கிறேனா? அவர்களின் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்காக நான் பேசுகிறேன். இந்த நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்கின்றனர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அத்தகையை அமைப்புகளோடு திருமாவளவன் கொஞ்சுகிறார்.இந்து மதத்தில் உள்ள குறைகளை சுட்டுக்காட்டுவது போல், இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவறுகளையும் தட்டிக் கேட்க வேண்டும். இனியும் இதனை செய்தால் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்.

திருமாவளவன் கட்சியினர் மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கின்றனர். இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை. எனது பிரச்சாரத்தை தொடங்குவேன். எனது பிரச்சாரம் மத நல்லினக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். மத்திய அரசின் பல திட்டங்களை அதிமுக ஆதரித்துள்ளது. ஆனால், அனைத்து திட்டங்களையும் ஸ்டாலின் எதிர்க்கிறார். வெறும் அரசியல் லாபத்திற்காக செய்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க