• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இது தான் நடனமா எமி ஜாக்சனை கலாய்த்த நெட்டிசன்கள்

April 6, 2017 தண்டோரா குழு

ஐ.பி.எல்தொடக்க விழாவில் நடனமாடிய எமி ஜாக்சனை நெட்டிசன்கள் கலாயத்து வருகின்றனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் பத்தாமாண்டு தொடக்க விழா நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. வழக்கத்தை விட இந்த வருடம் 8 நாட்கள், 8 ஸ்டேடியங்களில், 8 நட்சத்திரங்களுடன், 8 தொடக்க விழா நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் துவக்க விழா நிகழ்ச்சி ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண ஏராளமானோர் ரசிகர்கள் குவிந்திருந்தனர். நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபல நடிகை எமி ஜாக்சனின் நடன நிகழ்வும் அரங்கேறியது. அதில் பிரபல இந்தி பாடல்களான கலா சாஸ்மா, ஓம் ஷாந்தி ஓம் உள்ளிட்ட பாடல்களுக்கு எமிஜாக்சன் நடனமாடினார்.

இந்நிலையில், எமி ஜாக்சனின் நடனம் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது போல் தெரிகிறது. இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் யாராக இருந்தாலும் கலாய்த்து தள்ளி வரும் நெட்டிசன்கள் எமி ஜாக்சனையும் விட்டுவிடவில்லை இது தான் நடனமா என்பது போல் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க