• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இது தான் சரியான தருணம் அஜித்தை அரசியலுக்கு அழைத்த பிரபலம் !

March 16, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். தல என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் தன்னுடைய ரசிகர்கள் பாஜகவில் இணைந்த போது தான் நடிக்க மட்டும் தான் வந்தேன் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரபல இயக்குநர் சுசீந்திரன் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

40 ஆண்டுகள் திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டும் தான் முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இது 100% சரியான தருணம் வா தலைவா மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க