• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இதய நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி கிளிமஞ்சாரோ மலையை ஏறி சாதனை!

August 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் இதய நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி ஆப்பிரிக்காவின் சிகரமான கிளிமஞ்சாரோ மலையை ஏறி சாதனை படைத்துள்ளாள்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ரோக்ஸ்சி மற்றும் அவளுடைய 10 வயது சகோதரன் பென் இருவருக்கும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இருப்பினும், ஆப்ரிக்க நாட்டிலுள்ள 19,341 அடி உயரமுள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏற வேண்டும் என்று ஆர்வம் அவர்களுக்கு இருந்தது.

தங்களுடேய விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோரும் அவர்களுடைய இதய மருத்துவருடன் ஆலோசனை செய்த பிறகு, குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அந்த சிகரத்தை ஏற முடிவு செய்தனர்.

இதையடுத்து, ஆப்ரிக்காவின் கிளிமஞ்சாரோ மலையை ஏற தொடங்கினார். 5 நாட்கள் ஏறிய பிறகு, வெற்றிகரமாக சிகரத்தை அடைந்துள்ளனர். மலையேற தொடங்கிய பென் மற்றும் ரோக்ஸ்சி, மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகணத்தின் மலை பகுதியில் மலை ஏறி, பழகியதால், அது அவர்களுக்கு சிரமமாக தெரியவில்லை. அது வரை அவர்கள் இரவில் திறந்த மலை பகுதியில் தங்கியது இல்லை. ஆனால், கிளிமஞ்சாரோ சிகரத்தில் தங்கியது ஒரு புது அனுபவம் என்று அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க