• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் – டிடிவி தினகரன்

March 22, 2019 தண்டோரா குழு

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

நாடு முழுவதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் புதுச்சேரி என 4௦ தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் 18 சட்டமன்ற தொகுதிகளுகான இடைதேர்தலும் நடைபெறவுள்ளதால் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படும் சூழலில், இடைதேர்தலில் போட்டியிடும் அரசியல் காட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக, திமுக இரு பெரும் கட்சிகளின் கூட்டணியில் இல்லாத பிறகட்சிகள் தனித்தும், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றனர். மேலும் பல்வேறு சிறிய கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
இவ்வேளையில் அதிமுகவில் இருந்து பிரிந்த தனி பெரும் இயக்கமாக உருவெடுத்து ஆர்.கே நகர் இடை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பெரிதும் எதிர்பர்க்கப்படுகிற அம்மா மக்கள் முனேற்ற கழகதின் சார்பாக இடைதேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.

அப்பட்டியலில் :

சோளிங்கர் – டி.ஜி.மணி ,
பாப்பிரெட்டிபட்டி – டி.கே.ராஜேந்திரன்,
நிலக்கோட்டை (தனி) – ஆர். தங்கதுரை,
திருவாரூர் – எஸ்.காமராஜ்,
தஞ்சாவூர் – எம்.ரெங்கசாமி,
ஆண்டிப்பட்டி – ஆர்.ஜெயக்குமார்,
பெரியகுளம் (தனி) – கே.கதிர்காமு,
விளாத்திகுளம் – கே.ஜோதிமணி,
தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) – என்.முருகசாமி. இவ்வேட்பாளர் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.

மேலும் படிக்க