• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்கர் பரிந்துரைக்கான திரையிடலில் சூரரைப்போற்று!

January 26, 2021 தண்டோரா குழு

சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான திரைப்படம்சூரரைப்போற்று. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் ஆஸ்கர் ரேஸில் பங்குபெறவுள்ளது.

பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம் பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.
சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் பங்குபெறவுள்ளது என்ற செய்தியால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க