October 8, 2026
தண்டோரா குழு
டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தினசரி தேநீரை எவ்வாறு ரசித்து ருசிக்க விரும்புகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ‘டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட்’ என்ற புதிய தேயிலையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அறிமுகம் குறித்து டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பேக்கேஜ்ட் பிவரேஜஸ் & ஆர்கானிக் இந்தியா பிரிவுத் தலைவர் சரத் வர்மா பேசுகையில் டாடா டீ சக்ரா கோல்ட், ஆழ்ந்த நிறம் , ஈர்க்கும் நறுமணம் மற்றும் நாவிற்கு நிறைவளிக்கும் சுவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 100 கிராம் பாக்கெட்டை ரூ70/- என்ற கவர்ச்சிகரமான அறிமுக விலையில் ’டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட்’ கொண்டுவந்துள்ளது.
உள்ளூர் மக்களுக்கிடையே அதிகம் விரும்பப்படும் தேநீர் குறித்த விருப்பங்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தயாரிப்புகளை வழங்குவதே டாடா டீ சக்ரா கோல்டின் “தமிழர்களுக்கான தேநீர்” என்ற வாக்குறுதியின் மையக்கருத்தாகும். தினமும் தேநீரைச் சுவையுடனும் நறுமணத்துடனும் குடிப்பதற்கு ஏற்ற வகையிலும், ஒவ்வொரு கப் தேநீரும் தனித்துவமான உற்சாகமிகுந்த அனுபவத்தை வழங்கும் வகையிலும், அசாமிலிருந்து கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தர தேயிலைகளைக் கொண்டு ’சக்ரா கோல்ட் செலக்ட்’ மிகநேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
“உயர்தரமான தேநீர் பருகும் அனுபவம் எப்போதுமே அதிக விலையில் விற்க்கப்படும் தேயிலையில்தான் கிடைக்கும்” என்ற மக்களின் பொதுவான எண்ணத்தத் தகர்த்தெறியும் வகையில் ’டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட்’ தேயிலையின் அறிமுகம் அமைந்துள்ளது. இத்தயாரிப்பின் இந்த சிறப்பம்சமானது, “நிறமும் மணமும் பிரைட், விலையும் ரொம்ப ரைட்!” என்ற பிரச்சார வாசகத்தின் மூலம் எளிய, நினைவில் நிற்கக்கூடிய, அசல் தமிழ் உணர்வோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருத்து, தேநீரின் ஆழ்ந்த நிறம் மற்றும் நறுமணத்தைக் கொண்டாடுவதோடு, அதன் கவர்ச்சிகரமான விலை மதிப்பையும் உறுதிப்படுத்துகிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை, ‘தமிழர்களுக்கான தேநீர்’ என்பது வெறும் ஒரு வாசகம் மட்டுமல்ல; உள்ளூர் மக்களின் சுவையை ஆழமாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தேநீரை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். தமிழ்நாட்டில் சாதாரணமாக விற்பனை செய்யப்படும் ஒன்றாக இல்லாமல், தமிழ்நாட்டின் ரசனைக்காகவே பார்த்துப் பார்த்து அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட தேநீராக டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட் விளங்குவது அந்த அர்ப்பணிப்பின் மற்றொரு சான்றாகும்” என்று தெரிவித்தார்.
டாடா டீ சக்ரா கோல்ட் செலக்ட், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மளிகைக் கடைகள் மற்றும் பிற முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.