• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசுத் தலைவரை சந்திப்போம் – தங்க தமிழ்ச்செல்வன்

August 26, 2017

தமிழக (பொறுப்பு) ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டு நாளில் குடியரசுத் தலைவரை சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இதுக் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“நாங்கள் அளித்த மனு மீது தமிழக (பொறுப்பு )ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டுநாட்களில் குடியரசுத் தலைவரை சந்திப்போம். அவரிடம் இதுக்குறித்து மனு அளிக்கப்படும்.

சபாநாயகர் தனபால் முதல்வராக வேண்டும் என்று திவாகரன் கூறியது தனிப்பட்ட கருத்து. எனினும் கட்சியின் மூத்த உறுப்பினரான தனபால் முதல்வராக வரலாம்.

தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் அறிவித்த போராட்டத்தை எப்போது நடத்தப்போகிறார். தொகுதி மக்களை சந்திக்க முடியாமல் வருத்தத்தோடு விடுதியில் தங்கியுள்ளோம்.”
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

மேலும் படிக்க