• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநரை நாளை சந்திக்கின்றனர் திமுக எம்எல்ஏக்கள்

August 26, 2017 தண்டோரா குழு

தமிழக அரசியல் சூழல் குறித்து திமுக எம்எல்ஏக்கள் நாளை காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கவுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையிலிருந்து சென்னை வந்தார்.இதற்கிடையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து கவர்னரை சந்திக்க திமுகவினர் நேரம் கேட்டிருந்தனர். இதையடுத்து, நாளை (ஆக.,27) காலை 10.30 மணிக்கு சந்திக்க தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த சந்திப்பு நாளை நடக்கிறது.

ஆளுநரை துரைமுருகன், தலைமையில்,கனிமொழி எம்.பி., ஜே. அன்பழகன், ஆர்.எஸ். பாரதி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர்.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் அளித்த பேட்டியில்,

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூறியதால் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜனநாயகத்தை காப்பார் என நம்பிக்கை உள்ளது என்றார். மேலும், ஆளுநர் தாமதப்படுத்துவதால் குதிரை பேரம் நடைபெறும். பெரும்பான்மை நிரூபித்து ஆட்சி நீடித்தால் கவலையில்லை இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

மேலும் படிக்க