• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு தானாக வந்து தானாகவே விலகியுள்ளார்– ஓபிஎஸ்

July 22, 2017 தண்டோரா குழு

ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு தானாக வந்து தானாகவே விலகியுள்ளார் என முன்னாள் முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ் அணிக்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தவர் கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி. இந்நிலையில், அவர் நேற்று பன்னீர்செல்வம் அணி தம்மை புறக்கணிப்பதாகவும் என்னை புறக்கணிப்பவர்களை, நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக்கூறினார்.

இதற்கிடையில் இன்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் ஓ.பி.எஸ், ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு தானாக வந்தார், தானாகவே விலகியுள்ளார். அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அழைப்பு கொடுக்கப்பட்டது என அவர் கூறினார்.

மேலும் படிக்க