• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் விதைப் பந்துகள் தயாரிப்புப் பயிலரங்கம்

January 22, 2019 தண்டோரா குழு

கோவையை அடுத்த காரமடையில் உள்ள , டாக்டர் ஆர் . வி . கலை அறிவியல் கல்லூரியில் விதைப்பந்து தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.

கோவையை அடுத்த காரமடையில் உள்ள , டாக்டர் ஆர் . வி . கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இன்று விதைப்பந்து தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிலரங்கம் இன்று நடைபெற்றது. இப்பயிலரங்கத்தை கல்லூரியின் செயலர் சுந்தர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வே.சுகுணா முன்னிலை வகித்தார். மேலும், அவினாசி , ரீஜன் கிரீன் நிறுவனர் ப.ராமசாமி மற்றும் ரா.பத்மபிரியா ராமசாமி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மரங்களின் முக்கியத்துவத்தையும், இயற்கை பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு மற்றும் விதைப்பந்தின் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

இப்பயிலரங்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெற்று சுமார் 1300 விதைப்பந்துகளை தயார் செய்தனர். இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . நட்புச்சூழல் மன்றத்தின் பொறுப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கி.சின்னராஜ்,அ.செந்தில்குமார் ஆகியோர் இப்பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் படிக்க